NewTamilWorld
 
 

Homepage 

மீண்டெழுவர் தமிழ் முடிசூட.....
 

உலகே!


கண்கெட்டுப்போன உன் அறிவுக்கு
செவிப்புலனற்றுமா போனது?
கொலைவெறிச் சிங்களவன் கோரப்பிடியிருந்து எம்
உறவுகளின் உயிர்பிழியும் கதறல்கள் உனக்குக் கேட்காமல் போனதென்ன?

தமிழன் ஒன்றும் பஞ்சணைக்காய் காத்துக்கிடப்பவன் அல்ல.
உடலைக்கிழிக்கும் முட்களின் மீதாயினும்
தன் சொந்த நிலத்தில் வாழ நினைப்பவன் அல்லவா.

வீழ்ந்த உடல்களின் ஆடைகளைந்து
ஆனந்தம் காணும் சிங்கள நரிகளின்
கோர மனதைக் கொத்தியெரிக்க
கோடரி வேண்டும் எம் கைகளில்.

தமிழ் தொட்டு விளையாட தெவிட்டாது
தித்திக்கும் நன்றாய். - அதை
அடக்கி நீ ஆள நினைத்தால் குறிப்பெடு
இருப்பொன்று இருக்காது உனக்கு உலகில்
தமிழ் உன்னை அழிக்கும்.

தமிழ்தான் உங்கள் உயிர் அன்னை
தமிழ் தான் எங்கள் சுவாசக்காற்று
தமிழ் தான் எங்கள் வாழ்வும்.
திசையெட்டும் சிதறி நாம் போனாலும்
தமிழோடு தான் எங்கள் சாவும் வேண்டும்.

தத்தித் தவழ்ந்து கால்முளைத்து
நடைபயிலும் குஞ்சுகளை,
பொத்தி நாம் காத்த எம் முத்துக்களை,
கொத்துக் குண்டெறிந்து அவர்
கால் முறித்தாய், கையொடித்தாய்
உடல்கிழித்து அவர் உயிரையும் தானெடுத்தாய் சிங்களமே!
இன்னுமா உன் தமிழ் இரத்தவெறி ஆறவில்லை?

கொஞ்சம் பொறு...
கொக்கரிக்காதே முல்லையில் உந்தன்
சிம்மாசனம் ஏறியதாய்.
புலிமறவர் மீளெழுவர் புயல்களின் நடுவே. - ராஜ
பக்சக்கள் போடும் கும்மாளம் யாவும் சுடுகாடு போகும்.
சுட்டெரிக்கும் சூரியன்களாய் எங்கள்
பிரபாகரப் பிரவாகம் சுனாமியாய் வந்துன்
ஆமிப்படைழிக்கும் அப்போ
எம் தமிழீழ மண் செழிக்கம். இது நடக்கம்

கொல்லாமைப் போதகனின் மதம் நின்றா நீ
கிளஸ்ரர் குண்டெறிவாய்?
வில்லாண்மை வேந்தர்-எம் மைந்தர் மீண்டெழுவர்,
யப்பானின் பெருநிதியால்
பாக்கிஸ்தானின் பெடிபொருளால்
சீனத்து பீரங்கியால்- இன்னும்
பலரதும் பலத்தோடு நீ எமையழிக்க நினைத்த
சொர்ப்பணங்கள் யாவும்
சிங்களத்து சிப்பாயின் பிணங்களாய் வீழும் - அப்போ
விடிகாலை ஒன்று எம் இனத்துக்காய் ஒளிரும்
மாண்ட எம் வீரர் கனவு பலிக்கும்.

விடிகாலை ஒன்று எம் இனத்துக்காய் வேண்டும்.
மாண்ட எம் வீரர் கனவு பலிக்கும்.

தாவீது////

HomePage 

Copyright (c) 2008- 2009 NewTamilWorld . All rights reserved.