முல்லைத்தீவு இராணுவத்திற்கு தொல்லைத் தீவு
-
28. 02. 2009, 21:18
- கட்டுரைகள்,
பொய்ச் செய்திகளால்
குவிந்துகிடக்கிறது போர்! பிரபாகரன் முல்லைத்
தீவை விட்டு எப்போதோ போய்விட்டார். அங்கு
முக்கியத் தளபதிகளே இல்லை. இன்னும் ஒரு சில
நாட்களில் முல்லைத்தீவுப் பகுதியையும்
இராணுவம் கைப்பற்றிவிடும்.
இப்போது சுமார் 600
போராளிகள்தான் அமைப்பில் இருக்கிறார்கள்.
அவர்கள்தான் மக்களைக் காட்டைவிட்டு
வெளியில்விடாமல் துப்பாக்கி முனையில்
மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்……
மரபுரீதியான இராணுவமாக இருந்த புலிகள், இன்று
அதை இழந்துவிட்டார்கள். வெறுமனே காடுகளில்
மறைந்திருந்து சில கெரில்லா தாக்குதல்களை
நடத்த மட்டுமே அவர்களால் இனி முடியும்.
அவர்களது விமானப் படை ஓடுதளம் அத்தனையும்
கைப்பற்றப்பட்டுவிட்டன. இனி அவர்களால் வான்
படையை இயக்க முடியாது. சாலை என்ற கடற்படை
முகாமையும் கைப்பற்றிவிட்டதால், அவர்களால்
கடல் பகுதியிலும் எந்தத் தாக்குதலையும் செய்ய
முடியாது. மூன்று மாதங்களுக்குத் தேவையான
உணவுப் பொருள், எரி பொருட்கள்தான் அவர்களிடம்
இருக்கிறது. அத்தனை சக்திகளையும்
இழந்துவிட்டார்கள். இப்படி தினந்தோறும்
செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
‘புலிகளால் இனி எழுந்திருக்க முடியாது. அவர்களது கதை முடிந்துவிட்டது’ என்கிறார் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா. ‘கடல் மார்க்கத்தின் அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கடலில் விழுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இல்லை’ என்று கடற்படை தளபதி வசந்த கருணாகொட கர்ஜிக்கிறார். ‘புலிகள் ஆயுதத்தைக் கீழே போடும் வரை போர் நிறுத்தம் கிடையாது. இன்னும் சில நாட்களில் எங்களது எண்ணம் நிறைவேறும்’ என்று மகிழ்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்ஷ.
அத்தனைக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது மாதிரி கொழும்புக்குள் வான் படையைச் செலுத்தி மிரளவைத்துள்ளார்கள் புலிகள். ரூபன், சிரித்திரன் ஆகிய இரண்டு போராளிகள் இதில் இறந்து போனார்கள். நான்கு மாதங்களுக்கு முன்னால் புலிகளின் வான் படை இதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தியது. எனவேதான், அவர்களது விமானங்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று இராணுவம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. அத்தனையும் வீண் என்பதைக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் வெளிச்சப்படுத்தி இருக்கிறது.
இவை ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் இதே நபர்கள் சொல்லி வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றன. ‘எனக்கு இன்னும் ஓர் ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது’ என்று மெதுவாக ஆரம்பித்திருக்கிறார் சரத் ஃபொன்சேகா. அவரது எடுபிடியாக மாறிப்போன கருணா, ‘புலிகளை ஒடுக்கி, முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வர இன்னும் 18 மாத காலம் ஆகலாம்’ என்று கண்டு பிடித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் சொன்னபடி பார்த்தால், அவர்கள் புலிகள் அனைவரையும் ஒழித்துவிட்டு, கடந்த 4-ம் தேதியுடன் ‘இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்க வேண்டும். மாறாக, தங்கள் கொடூரத்துக்கு இன்னும் ஓராண்டு காலம் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படிக் காலத்தைத் தள்ளிப்போட, விடுதலைப் புலிகளின் ஆக்ரோஷமான எதிர்த் தாக்குதல்தான் காரணமாக இருக்க முடியும்.
பொதுவாக தங்களின் சிறு அசைவுகளையும் ஆபரேஷன்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்த புலிகள் இப்போது அடக்கி வாசிப்பது, அவர்கள் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது. புலி ஆதரவாளர்களே சோர்ந்துபோய் ‘இனி நல்ல செய்தி வராதா?’ என்ற ஏக்கத்தோடு வலம் வர ஆரம்பித்தார்கள். ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. புலிகளின் வியூகங்களால் மிரண்டு சிங்கள இராணுவம் உறைந்து போயிருப்பதாகத் தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. ‘இன்னும் சில அங்குலம் நிலத்தை இழந்தால் கூடத் தலை தப்புவது சிரமம்’ என்பதால், கடைசிக்கட்டக் கோபத்தைப் புலிகள் காட்டி வருகிறார்களாம். அவர்களது வியப்பூட்டும் வியூகம். விறுவிறுப்பான வேகம். அச்சுறுத்தும் அமைதி. மூன்றும்தான் இன்று புலிகளுக்குக் கை கொடுத்து வருகிறதாம். சமீபத்தில் வெளியான சில தகவல்கள் அதிர்ச்சியைக் கிளப்புகின்றன. மௌனம் ஏன்?
கடந்து போன ஆண்டு
புலிகளுக்கு உண்மையில் கஷ்ட காலம். அவர்கள்
கையில் இருந்த பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி
உள்ளிட்ட முக்கிய நகரங்களை இழந்தார்கள்.
இந்தப் போரை ஆரம்பித்த ராஜபக்ஷவிடம், சரத்
ஃபொன்சேகா புதிய உத்தியைச் சொல்லிக்
கொடுத்தார். ‘இதுவரை அவர்கள் வைத்திருந்ததை
நாம் பறித்தோம். பிறகு அவர்கள் பறித்தார்கள்.
நாம் மறுபடி பறிக்கிறோம். இப்படியே போனால்
ஆட்டம் நிற்காது. இன்னும் 30 வருஷத்துக்குத்
தொடரும். எனவே முதலில் புலிகள் அமைப்பின் ஆள்
பலத்தைக் குறைக்க வேண்டும். அதைச் செய்யாமல்
அந்த அமைப்பை ஒழிக்க முடியாது’ என்று
சொன்னார். அதற்கான திட்டத்தை ஃபொன்சேகா
போட்டார். அதாவதுஇ ஒவ்வொரு இடமாகப் போய்
சும்மா தாக்குதல் நடத்திவிட்டுப்
பின்வாங்குவது!
ஒவ்வொரு தாக்குதலிலும் பத்து, இருபது என்று
இறந்தால் ஒரு வருஷத்தில் மொத்தத்தையும்
முடித்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள்.
இலக்கே இல்லாமல் குண்டுகளைப் பயன்படுத்தியது
இதனால்தான்.
இதையே கொஞ்சம் மாற்றி யோசித்தார்கள் புலிகள். ‘இடத்தை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். போராளிகள் தான் முக்கியம். அவர்களில் யாரையும் இழக்கக் கூடாது. எனவே பின்வாங்கலாம்’ என்று பிரபாகரன் முடிவெடுத்தார். எனவேதான் பல இடங்களை விட்டு வர ஆரம்பித்தார்கள். அப்போதும் சும்மா பின்வாங்காமல் எதிர்த் தாக்குதலைச் சில நாட்கள் நடத்துவார்கள். புலிகள் சண்டையைத் தொடங்கி விட்டார்கள் என்று படை வீரர்களை ஒரே இடத்தில் குவிக்க ஆரம்பித்ததும், அங்கு தாக்குதலை அதிகப்படுத்துவார்கள். பிறகு எந்தச் சத்தமும் இல்லாமல் பின் வாங்கி வேறு பகுதிக்கு இடம் பெயர்வார்கள். இந்தத் தாக்குதல்கள்தான் கடந்த ஐந்து மாதங்களாக நடந்திருக்கின்றன. ‘சொற்ப இழப்பு, குறைந்த வெடிபொருட்களைப் பயன்படுத்துவது, இலக்கை மட்டுமே அடிப்பது, இராணுவ வீரர்களைக் கொல்வது, ஆயுதங்களைக் கைப்பற்றுவது’ ஆகிய ஐந்து கட்டளைகள்தான் பிரபாகரன் தனது தளபதிகளுக்கு இட்டுள்ள பஞ்ச சீலம்.
இலங்கை நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு புள்ளிவிபரம் படிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 3 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரம் பேர் பலத்த காயம் அடைந்து உடல் ஊனமுற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. புலிகள் சும்மா இருந்தால், இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் புலிகள் தங்களது முழு அளவிலான பலத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தவில்லை. அவர்கள் தங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி ‘ஓயாத அலைகள்-1′ நடத்தி முல்லைத்தீவைப் பிடித்தார்கள். அடுத்து கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள். ‘ஓயாத அலைகள்-3′ ஆனையிறவை வாங்கிக் கொடுத்தது. அதாவது இரண்டு ஆண்டு இடைவெளியில் வரிசையாக இதைப் பிடித்துக் காட்டிய தளபதிகளில் பால்ராஜ் தவிர, அத்தனை பேரும் இன்றும் பிரபாகரனுடன் இருக்கிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் அதைவிட ஆயுதங்கள் அதிகமாகி இரு
