தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் மீண்டெழுவோம்
-
08. 03. 2009, 13:41
- கட்டுரைகள்
ஆனால் புலிகளின் பலம் தொடர்பில் வேறெந்த அமைப்பையும் விடவும் சிறப்பாக ஆய்வு செய்யும் இந்தியப் புலனாய்வுத்துறையும் இந்திய அதிகாரபீடமும் புலிகள் பலத்துடன் இருப்பதாக வெளிப் படையாக ஏற்றுக்கொண்டுள்ளன.
கடந்த 2009.02.18 அன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சிங்களத்தின் காலில் விழவேண்டும் என்று தனது அரசின் நிலைப் பாட்டைக் கூறினார்.
அவரது கூற்று பலராலும் கண்டிக்கப்பட்டபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சிங்களத்தின் பிடரியில் விழுந்தது அடி. 2009.02.21 இரவு சிங்கள வான்படைத் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானது.
வான்படைத் தலைமையகத்தைத் தாக்கியழித்த கரும்புலி கேணல் ரூபன் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.ஒரு கல்லில் இரு மாங்காய் போன்று சிங்களப் பொருண்மியத்தின் இரண்டாவது முதன்மை மையமான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் அழிவுகளை ஏற்படுத்தினார்.
லெப்.கேணல் சிரித்திரன் சிங்கள வான்படை செயற்பாட்டு மையமான கட்டுநாயக்கா படைத்தளத்தில் தாக்குதல் நடத்தியிருந்தார். வான் கரும்புலிகளின் தாக்குதல் வெற்றியென்பது மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.
ஒருபுறம் கடலும் மூன்று புறமும் சிங்களப் படைகளாலும் சூழப்பட்ட சிறு நிலப்பரப்பில் புலிகளை முடக்கி விட்டதாக சிங்களம் கூறிக்கொண்டிருக்க, அதனை முழு உலகும் நம்பியது. எம்மவர் பலர்கூட ஊக்கமிழந்து தோற்றுவிட்டோமோ என்று துயரப்படும் நிலையிலிருந்த போதுதான் வான் கரும்புலிகள் தமது சாதனையை செய்து காட்டினார்கள்.
வானூர்தி மேலெழுந்தவுடன் சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதபலம் சிங்களப் படைகளுக்கு இருந்தது. ஆனால் வானோடிகளின் துணிச்சல், திறமை காரணமாக அவர்கள் தமது இலக்கை அடையும்வரை பறந்தார்கள். ஆக வான் கரும்புலிகளின் இலக்கு முழுமையாக அடையப்பட்டது.
உண்மையான சேதவிபரங்களை அறிய முடியாதளவிற்கு மூடிமறைப்பதில் வெற்றிபெற்றது சிங்கள அரசு. ஆனாலும் சில அவதானிப்புக்கள் மூலம் சில மதிப்பீடுகளைச் செய்யமுடியும்.
கடந்தகால வான் தாக்குதல்கள் அனைத்தின்போதும் சிங்கள வான்படை விமானங்கள் பறந்து வந்து வன்னியில் ஓர் சுற்றுச்சுற்றி தாம் பலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். அவ்வாறான பறப்புக்கள்மூலமாக சிங்கள மக்களின் உளவுரணை உறுதி செய்துகொள்வார்கள்.
ஆனால் வான் கரும்புலிகளின் தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்குப் பறப்புக்களையே மேற் கொள்ளமுடியாத பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது சிங்கள வான்படை. சிங்கள வான்படை மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டதன்மூலம் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரது வினைதிறன்மிக்க தாக்குதலின் வெற்றியின் பரிமாணம் வெள்ளிடை மலையானது.
எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையிழந்து போயிருந்த தமிழர்கள் வெற்றிக்களிப்பிலிருந்த சிங்கள எதிரிகளும் தமிழ் துரோகிகளும் இந்திய அதிகாரபீடமும் பன்னாட்டுச் சமூகமும் ஆச்சரியப்படுமளவிற்கு தாக்குதலை நடத்தியதன்மூலம் ஒருபோதும் வீழமாட்டோம் என்ற செய்தி இடித்துரைக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக இலக்குத் தெரிவும் புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியது. அண்மைக்கால தற்கொடை வான்தாக்குதல் அமெரிக்காவில் நடந்தது. அத்தாக்கு தலில் பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அத்தாக்குதல்மூலம் பின்லாடன் உலகப் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார்.
ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் விடுதலைப் போராளிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் தமது தற்கொடைத் தாக்குதலில்கூட எதிர்த்தரப்பு பொதுமகன் ஒருவர்கூட பாதிப்படையக்கூடாது என்ற இலட்சிய உறுதிப்பாட்டைக் கண்டு வியந்துநிற்கிறது பன்னாட்டுச் சமூகம்.
தாக்குதல் உத்தரவை வழங்கும் தலைவர் தொடர்பான மதிப்பீட்டையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருக்கிறது. கொடூரமான போரைத் தொடுத்து அப்பாவிகளைப் பலியெடுத்துவரும் சிங்களத்தரப்பு தமது இனப்படுகொலையின் உச்சத்தில் நிற்கிறது.
பச்சிளம் பாலகர் முதல் முதியோர்வரை அகவை வேறு பாடின்றி தமிழர்களைக் கொன்றொழித்து வருகிறது சிங்களம். அப்படியான சூழ் நிலையில் சிங்களத்தின் கோட்டையில் நடத்தும் தாக்குதல் ஒன்றின்போது பொது மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால்கூட எவருமே புலிகள் மீது குற்றம் சாட்டியிருக்கமுடியாது.
அப்படியான களச்சூழல் இருந்தும்கூட சிங்களப் பொதுமகன் எவரையும் பாதிக்காத வகையில் தாக்குதலை நடத்தியதன்மூலம் இலக்கைத் தீர்மானித்ததன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் உலக அளவில் உயர்வாகப் பார்க்கப்படுகின்றனர்.
அத்தாக்குதலில் வீர காவியமான கருவேங்கைகள் நினைத்திருந்தால் பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்திருக்கலாம். பலநூறு கோடி பெறுமதியான சொத்தழிவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அதுதான் விடுதலைப் புலிகளின் உயர் மரபு.
ஒழுக்கம். உலகமே உற்று நோக்க வைத்த உறுதி.மூன்று நாட்களில் புலிகளின் பலம் தொடர்பான மதிப்பீட்டை மாற்றம் செய்யவேண்டியநிலை ஏற்பட்டது இந்தியாவிற்கு. ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அடைக்கலம் அடைய வேண்டுமென்று புலிகளுக்குப் போதித்த பிரணாப் முகர்ஜி, புலிகள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்குமளவுக்கு நிலைமாறியது.
இந்திய நிலைப்பாட்டை மாற்றினார்கள் கேணல் ரூபனும், லெப்.கேணல் சிரித்திரனும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு போதும் வீழமாட்டார்கள். உறுதியுடன் மீண் டெழுவார்கள் என்ற செய்தியைக்கூறி தனது இன்னுயிரை இருப்போர் வாழ்விற்காக ஈகம் செய்த உயர்ந்த மனிதர்கள். களத்தில் எமைக்காக்கும் எமதருமைப் போராளிகள் போற்றுதலுக்குரியவர்கள்.
பல நாடுகளின் இராணுவ உதவிகள் போர்த் தளபாட நன்கொடைகள், ஆலோசனைகள், ஊக்குவிப்புக்களுடன் வெறிகொண்டு வருகிறது சிங்களப்படை. பத்து நாட்களுக்கொருவெடிபொருள் கப்பல் பாகிஸ்தானிலிருந்து வருவதாகக் கூறுகிறது சிங்களம். அப்படி வரும் பெருமளவு ஆயுதபலத்துடன் தமிழின அழிப்பில் ஈடுபடுகிறது சிங்களப் படை.
ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் எதிரடி கொடுத்துவருகின்றனர் களத்தில் நிற்கும் போராளிகள். அவர்களது காப்பில் நாம் வாழ்ந்துவருகிறோம். போதியளவு உணவின்றி, உறக்கமின்றி, ஓய்வின்றி எமைக்காக்கும் போராளிகளுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?
உலகப்போர் நியதிகளை மீறி வேதியல் குண்டுகளையும், கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி மனிதாபிமானமற்ற போரைத் தொடர்கிறது சிங்களம்.2009.02.14 ஆம் நாள் மத்திய, வடமேல் மாகாண தேர்தல் நாள். அன்றைய நாளுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை அடியோடு அழித
