NewTamilWorld
 
 

Homepage 

புலிகளுக்கு எதிரான போரில் அரச படைகளுக்கு வெற்றியா?

 Mon Mar 30, 2009 6:24 pm

 

புலிகளுக்கு எதிரான போரில் அரச படைகளுக்கு வெற்றியா?
நிலவரத்துக்காக வன்னியிலிருந்து கபிலன்


விடுதலைப் புலிகளுடனான போர் எத்தகைய சுமையானது என்பது இப்போது தான் இலங்கை அரசாங்கத்துக்கு புரியத் தொடங்கியிருக்கிறது.
புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தாலும், அவர்களை போராட்ட இயக்கம் என்ற வகையில் இல்லாதொழிப்பதில், நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறியிருக்கிறார் அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
அதுபோன்றே, விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் பலம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறமுடியாது என்றும், யுத்தம் முடிவடையும் கால எல்லையை இப்போது நிர்ணயிக்க முடியாதென்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலதான் பெப்ரவரி 7 ஆம் திகதிக்குள் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு, அவர்களிடமுள்ள பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விடும் என்று இந்த வருடத் தொடக்கத்தி;ல் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூட, கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பேசியபோது புலிகள் இயக்கத்தை இன்னும் சில தினங்களில் அழித்து விடுவதாக சூளுரை செய்திருந்தார்.
ஆனால், இவர்கள் கூறியது போன்று எதுவுமே நடக்கவில்லை.

புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு அரசாங்கம் கொடுத்த அத்தனை காலக்கெடுக்களும் இப்போது காலாவதியாகி விட்டன.
இந்தநிலையில் தான் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் சரி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவும் சரி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாதென்று கூறத் தொடங்கியுள்ளனர்.
இராணுவத் தரப்பின் திட்டமிடலுக்கு அப்பால் இப்போது போர் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான சண்டைகளே இப்போது வன்னிக் களத்தில் நடக்கின்றன.
போர் தொடர்பாக, புலிகளின் படைபலம் தொடர்பாக, புலிகள் தாக்குப் பிடிக்கும் திறன் தொடர்பாக படைதரப்பின் அத்தனை மதிப்பீடுகளும் தவறாகிப் போயிருக்கின்றன.
அரச படைகள் வன்னியின் பெரும் பகுதியைக் கைப்பற்றி விட்டன.
புலிகளை வெறும் 26 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கி வைத்திருக்கின்ற நிலையில் படைதரப்பின் அத்தனை மதிப்பீடுகளும் பொய்யாகி விட்டதாகக் கூறுவது சரியா? என்ற கேள்வி உங்கள் முன் எழலாம்.
நிச்சயமாக இந்தப் போர் பற்றிய கணிப்பீடுகளில் அரசபடைத் தரப்பு தவறு இழைத்திருப்பது அவர்களுக்கே இப்போது தான் புரியத் தொடங்கியிருக்கிறது.

அதனால்தான் முன்னர் போரை முடிவுறுத்தும் காலக்கெடுக்களைக் கூறி வந்தவர்கள், இப்போது தாமாகவே அடக்கி வாசிக்கிறார்கள். கால எல்லை பற்றிக் கூறமுடியாது என்கிறார்கள்.
புலிகள் பற்றிய படைத்தரப்பின் மதிப்பீடு பொய்த்துப் போனதற்கான காரணங்கள் என்ன? எந்த இடத்தில் அந்தத் தவறு நிகழ்ந்தது? என்று பார்க்கும்போது இந்த விடயத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
புலிகள் இயக்கம் என்பது 3 தசாப்த கால போராட்ட வரலாற்றைக் கொண்டது. அனுபவம் மிக்க தலைமை, தளபதிகள், போராளிகளையும் அர்ப்பணிப்பு மிக்க படைபலத்தையும் கொண்டது.

இதை வெறும் பயங்கரவாத இயக்கம் என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுப் போன படைதரப்பும் அரசாங்கமும் புலிகள் இயக்கத்தை ஒரு விடுதலை அமைப்பு என்ற கோணத்தில் பார்க்கத் தவறி விட்டன.
இதுதான் அவர்களின் முதல் தவறு. பயங்கரவாத அமைப்பு என்பது என்ன? அது எப்படிச் செயற்படும்? என்ற ரீதியில் சிந்தித்த படைத்தரப்பு, விடுதலை அமைப்பு ஒன்று அதிலிருந்து எந்த வகையில் வேறுபடும்? அதன் உத்திகள் எப்படிப் பட்டதாக இருக்கும்? என்ற கோணத்தில் சிந்திக்கவில்லை.

பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கையும், விடுதலை அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கையும் ஒரே மாதிரியான உத்தியைக் கொண்டதாக இருக்காது.

இந்த அடிப்படை வேறுபாட்டைக் கூட சரியாகப் புரிந்து கொள்ள அரச படைகள் தவறிப் போயிருக்கின்றன.
புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்திருந்தால் இராணுவத்தின் இப்போதைய தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியாமல் போயிருக்கும். படையினர் முன்பாக மண்டியிட நேரிட்டிருக்கும். அழிந்து போயிருக்கும்.
புலிகளைப் பயங்கரவாத இயக்கம் என்ற கருதுகோளின் அடிப்படையில் பார்க்க அரச படைகள் முற்பட்டதால் தான், குறுகிய காலக்கெடுவுக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று முன்னர் கணக்குப் போட்டார்கள்.
ஆனால், புலிகள் ஒரு விடுதலை அமைப்பாக இருப்பதால்தான் அவர்கள் படைத்தரப்பின் அதிஉச்ச அழுத்தங்களைக் கூட சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் இராணுவ அழுத்தங்களுக்கு வளைந்து, நெளிந்து சமாளித்துக் கொண்டாலும் முறிந்து போகாமல் நிமிர்ந்து நிற்பது தான் ஆச்சரியம்.
பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்கும், விடுதலை அமைப்பு ஒன்றுக்கும் இடையிலான கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப போரைத் திட்டமிடாதது இலங்கை அரசும் படைகளும் செய்த மிகப் பெரிய தவறாகும்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றை இராணுவ ரீதியாக அழித்தல் அல்லது நசுக்குதல் என்பது அவ்வளவு பெரிய விடயமல்ல.
காரணம் பயங்கரவாத இயக்கம் ஒன்று தனது ஆயுதபலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அடுத்தவரை மிரட்டிப் பணிய வைக்க முற்படும்.
ஒருகட்டத்துக்கு மேல் தம் மீது படைபலம் பிரயோகிக்கப்படும் போது அந்த அமைப்பில் இருப்பவர்கள் உயிரைக் காக்கத் தப்பி ஓடுவார்கள். சரணடைவார்கள்.

ஆனால், விடுதலை அமைப்புக்கு மக்கள் ஆதரவு இருக்கும். அவர்களுக்காக உயிரைக் கொடுக்கத் துணியும் போராளிகள் இருப்பார்கள். கடைசிவரை போராடுவார்கள். சரணடைய மாட்டார்கள்.
புலிகள் தொடர்பாக இலங்கை இராணுவம் செய்த மதிப்பிடுகளில் காணப்பட்ட இந்த தவறின் காரணமாகவே, புலிகள் இயக்கம் ஒருகட்டத்துக்கு மேல் போரிட முடியாமல் மண்டியிடும் என்று அவர்கள் கணக்குப் போட்டிருந்தனர்.
முக்கிய பிரதேசங்களை கைப்பற்றியதும் புலிகளின் தலைவர்கள் வெளிநாட்டுக்கு ஓடிவிடுவார்கள் என்று கணக்குப் போட்டது படைத் தலைமை.
அதன் காரணமாகவே புலிகளின் தலைவர்கள், தளபதிகள் தப்பியோடி விட்டதாக பொய்யான கதைகளைப் பரப்பியது.
புலிகளின் தலைவர்கள் தப்பி ஓடியதும் போராளிகள் சண்டையிடாமலே சரணடைவார்கள். போர் சுலபமாக முடிந்து விடும் என்ற கணக்கும் போடப்பட்டது.

இந்த வருடத் தொடக்கத்தில் படையினர் ஆனையிறவு, கிளிநொச்சிப் பகுதிகளைக் கைப்பற்றி கிழக்கு வன்னி நோக்கி முன்னேறத் தொடங்கியதும், புலிகள் பலமிழந்து விட்டார்கள். அடுத்தடுத்த கட்டங்களில் அவர்கள் பெருமளவில் சரணடைவார்கள் என்று படைத்தரப்பு கருதியிருந்தது.
ஆனால், மேற்கு வன்னியிலும் கிளிநொச்சி, முகமாலையிலும் இதுவரையில் எதிர்கொண்டிராத அளவுக்கு மோசமான எதிர்த் தாக்குதல்களையும், இழப்புகளையும் படைத்தரப்பு இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.

புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற அடிப்படையில் அரசாங்கம் கணக்குப் போட்டதால் அவர்களின் ஆட்பலம் பற்றி மதிப்பிட முடியவில்லை.
பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்கு இருக்க கூடிய ஆட்பலத்தை அதி;கரித்துக் கொள்வது சுலபமான காரியமல்ல.
எனவே, புலிகளின் ஆட்பலம் அடிக்க அடிக்கக் குறைந்து போகும் என்று மதிப்பிட்டார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா.
அதனால் தான் அவர் வன்னிப் போரின் ஆரம்ப காலத்தில், நிலங்களைப் பிடிக்கப் படையினர் போரிடவில்லை. நாளொன்ற